background img

புதிய வரவு

மூன்று வாரங்களில் வெங்காய விலை குறையும்: சரத் பவார்


நாடு முழுவதும் வெங்காயம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.100 வரை விற்கிறது. எனவே விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு உடனடி தீர்வுகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய விவசாய மந்திரி சரத்பவார் கூறியதாவது:-

வெங்காய விலையை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதியை உடனடியாக நிறுத்தி உள்ளோம். வெங்காயம் விலை இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பது நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்த பிரச்சினை இன்னும் 3 வாரத்துக்கு நீடிக்கும். அதன் பிறகு விலை குறைய தொடங்கி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெங்காய விலை உயர்வு பற்றி வியாபாரிகள் கூறும்போது "சீசன் இல்லாத நேரத்தில் மழை பெய்ததால் வெங்காயம் அழுகி தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.

அடுத்த கட்ட வெங்காய அறுவடை இன்னும் 15 நாளில் தொடங்கி விடும். அந்த வெங்காயம் மார்க்கெட்டுக்கு வந்ததும் விலை குறைந்து விடும்'' என்று கூறினர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts