background img

புதிய வரவு

சல்மான் பட் விளக்கம்: ஐ.சி.சி., நிராகரிப்பு

லாகூர் : தன் மீதான சூதாட்ட புகாருக்கு, பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அளித்துள்ள விளக்கத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நிராகரித்துள்ளது. புதிய விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் "ஸ்பாட் பிக்சிங்' எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும், ஐ.சி.சி., இடை நீக்கம் செய்தது. தன் மீதான சூதாட்ட புகாருக்கு, சல்மான் பட் 40 பக்க விளக்கத்தை, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி இருந்தார். இந்த விளக்கத்தை ஐ.சி.சி., ஏற்க மறுத்து விட்டது. அந்த விளக்கத்தில் சூதாட்ட குற்றச்சாட்டுகளை அடியோடு சல்மான் பட் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஐ.சி.சி., இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில், சல்மான் பட்டின் வக்கீல், அப்தாப் குல் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். புதிய வக்கீலாக சாகித் சயீத் செயல்பட உள்ளார். இது சல்மான் பட்டுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts