background img

புதிய வரவு

ஜெகன் 48 மணி நேர உண்ணாவிரதம்



விஜயவாடா : ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு ஆதரவாக விஜயவாடாவில் 48 மணி நேர உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 
ஆந்திராவில் சமீபத்தில் பெய்த மழையால், ஏராளமான பயிர்கள் நாசமாயின. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணிசமான நஷ்ட ஈடு தரக்கோரி, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம், அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று 48 மணி நேர உண்ணாவிரதத்தை துவக்கினார்.


கர்நூல் மாவட்டம், நந்தியாலிலிருந்து புறப்பட்டு விஜயவாடா வந்த ஜெகன்மோகன், "லக்ஷய தீக்ஷா' என்ற பெயரில் விஜயவாடாவில் கிருஷ்ணவேணி காட் அருகே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று அவருக்கு 37வது பிறந்த நாள் என்பதால், கனகதுர்கா கோவிலுக்கு சென்று வழிபட்டார். கிருஷ்ணா, குண்டூர், மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்., என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி பார்வதி, முன்னாள் அமைச்சர்கள், திரையுலக பிரமுகர்கள் பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts