background img

புதிய வரவு

திருவண்ணாமலை மலைமீது லிங்கம் வைத்து பூஜை: பெரும்பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை மீது மர்ம ஆசாமிகள் லிங்கம் வைத்து பூஜை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மலையை சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த குருஜி (30)என்பவர் தலைமையில்20பேர் மலை உச்சியில் பூஜை நடத்தி சிவலிங்கத்தை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.இவை ஆகம விதிக்கு முரணானது என்பதால் இது குறித்து தகவல் கோயில் நிர்வாகத்திற்கு தெரியவந்தது.இதனையடுத்து கோயில் ஊழியர்கள் மலை உச்சிக்கு சென்று பார்த்ததில் அங்கு லிங்கம் வைக்கப்பட்டு பூஜை செய்திருந்தது தெரியவந்தது.இதனையடுத்து அங்கு பூஜையில் ஈடுபட்ட 9பேரை மலையிலிருந்து கீழே இறக்கி கொண்டு வரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் குருஜி என்பவர் ஞானி என்று கூறி கொண்டு தன் கனவில் அக்னியால் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் ஆபத்து ஏற்படும் என தெரியவந்தது. இது போன்ற ஆபத்தை தவிர்க்கவே மலைஉச்சி மீது லிங்கம் வைத்து பூஜை செய்ததாக கூறினார்.மேலும் ஏற்கனவே குஜராத்தில் பூகம்பம் வருவதை அவர் கனவிலே தெரியவந்தது என்றும் கூறியுள்ளார்.இவர்களுடன் வந்த மேலும் 11பேர் மலை உச்சியிலேயே உள்ளனர். இவர்களை 21ஆம் தேதி காலையில் கீழே கொண்டு வரப்பட்டு இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.இதனையடுத்து கோயில் ஊழியர்கள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் விளையாட்டாக இது போன்ற செய்த சம்பவமா, அல்லது ஏதாவது சதிச்செயல் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இது குறித்து போலீசில் கோயில் நிர்வாகம் புகார் செய்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts