background img

புதிய வரவு

அமெரிக்காவை கலக்கப்போகும் மன்மதன் அம்பு

நடிகர் கமல்ஹாசன் - த்ரிஷா ஜோடி இணைந்திருக்கும் மன்மதன் அம்பு படம் அமெரிக்காவில் 65 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் வருகிற 23ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது. படத்தில் கமல், த்ரிஷா தவிர, மாதவன், சங்கீதா, ஓவியா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தை அமெரிக்காவில் மட்டும் 65 தியேட்டர்களில் ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் படம் அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவது இதுவே முதன் முறையாகும்.


தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஜெமினி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. அமெரிக்காவில் பாரத் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட உள்ளது. பொதுவாக மற்றவர்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி தனது ‌பேனரில் வெளியிடும், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மன்மதன் அம்பு படத்தை மட்டும் வேறு நிறுவனத்திற்கு விற்றிருப்பது கூடுதல் தகவல்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts