background img

புதிய வரவு

கணவனை உருட்டுகட்டையால் தாக்கி கொன்ற மனைவி கைது

பல்லடம்: கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன் (38); கூலி தொழிலாளி. இவரது மனைவி கருப்பாத்தாள் (35). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசம் அடைந்த கருப்பாத்தாள், அருகில் கிடந்த உருட்டு கட்டையால் கணவனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த ராஜனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது; மேல் சிகிச்சைக்காக நள்ளிரவு 12.00 மணிக்கு கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியில் ராஜன் உயிரிழந்தார். கருப்பாத்தாளை, பல்லடம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts