நான் காதலித்து வருவது உண்மைதான். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார் அனுஷ்கா. இதுபற்றி அவர் கூறியதாவது:
என்னுடன் நடித்த பல தெலுங்கு ஹீரோக்களுடன் இணைத்து கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏன், ஐந்து ஹீரோக்களோடு திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள். அவை எல்லாம் வதந்திதான். ஆனால் நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் யாரென்று சொன்னால் பலரின் புருவங்கள் உயரலாம் என்பதால் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் என்னை அதிகமாக காதலித்து வருகிறார். இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வருடத்தில் எங்கள் திருமணம் நடக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment