background img

புதிய வரவு

180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை

சென்னை : பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தமிழகத்தில், சமையல் கலையில் முத்திரை பதித்து வரும், தாமு என்ற தாமோதரன், தொடர்ந்து 25 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்ததால் அவருக்கு, "கின்னஸ் சாதனையாளர் விருது' வழங்கும் விழா, ஓட்டல் சவேராவில் நேற்று நடந்தது.
இதில் தாமோதரன் பேசியதாவது: சிறு வயதிலிருந்தே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் என்னிடம் இருந்தது. தற்போது அந்த எண்ணம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமையல் படிப்பு படிக்கும் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். என் சாதனையை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு, துணை நின்ற குடும்பத்தாருக்கும், ஓட்டல் நிர்வாகத்திற்கும், கால்நடை துறை செயலர் நிர்மலாவுக்கும், கின்னஸ் சாதனை தூதர் லூசியா, பத்திரிகை நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நன்றி. இவ்வாறு தாமோதரன் பேசினார். தாமோதரன், 20ம் தேதி காலை எட்டு மணிக்கு சமைக்க தொடங்கி, நேற்று காலை 8:30 மணிக்கு முடித்தார். இதில் 617 வகையான 180.64 கிலோ உணவை தனி நபராக செய்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தமிழக கால்நடை செயலர் நிர்மலா, சவேரா ஓட்டல் செயல் இயக்குனர் நீனா ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts