இயக்குனர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் விவாகரத்து செய்து பிரிந்தனர். செல்வ ராகவனுக்கும் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் சினிமாத் துறையில் இல்லாத பெண்ணை காதலிப்பதாக செல்வராகவன் அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:-
ஒரு பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அவர் சினிமாத்துறையில் இல்லை. விரைவில் எல்லோருக்கும் அந்த பெண்ணை அறிமுகம் செய்வேன். இரண்டு மாதமாகத்தான் நாங்கள் காதலிக்கிறோம். தினமும் இரண்டு மணி நேரம் அந்த பெண்ணு டன் செலவிடுகிறேன். சோனியா அகர்வாலுடன் சண்டை போடாமல்தான் பிரிந்தேன். இப்போதும் நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம்.
0 comments :
Post a Comment