background img

புதிய வரவு

கோவையில் 3 தங்கும் விடுதிகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி!

கோவை: விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 3 தங்கும் விடுதிகளுக்கு மாநகராட்சி அதிரடியாக சீல் வைத்தது.

தொடரும் சீல் வைப்பு

கோவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை களையெடுக்கும் பணி தேர்தலுக்கு முன்னரே கோவை மாநகராட்சியால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்டதால், மாநகராட்சியின் செயல்பாடுகள் தீவிரமாகாது என்றே பொதுமக்கள் கருதினர். ஆனால் மாநகராட்சியின் நடவடிக்கை தொடரத்தான் செய்கிறது.

மூன்று விடுதிகள்

உரிய அனுமதி பெறாமல், விதிமுறைகளை மீறி லாட்ஜுகள் கட்டப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து துணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் நகர் நல உதவி அலுவலர்கள் சவுந்தரராஜன், ஹேமலதா, ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று காலை காந்திபுரத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் நேரு வீதியில் உள்ள ஆறு மாடி கொண்ட விடுதியின் ஆறாவது மாடியில் 20 ஆயிரம் சதுர அடிக்கு அனுமதி பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மேற்படி லாட்ஜுக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல காந்திபுரத்தில் உள்ள மேலும் இரண்டு லாட்ஜூகளும் விதிகளை மீறி கட்டப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இன்றும் அதிரடி சோதனை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts