background img

புதிய வரவு

பிருதிவிராஜ் திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகள் வாழ்த்து

தமிழில் “மொழி” படம் மூலம் பிரபலமானவர் பிருதிவிராஜ். அபியும் நானும், வெள்ளித்திரை, பாரிஜாதம், ராவணன், நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, கனா கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிருதிவிராஜூக்கும் மும்பை டி.வி. நிருபர் சுப்ரியாமேனனுக்கும் கடந்த மாதம் 25-ந்தேதி திடீர் திருமணம் நடந்தது. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ரகசியமாக இந்த திருமணம் நடைபெற்றது.

இரு வீட்டு உறவினர்கள் 50 பேர் மட்டுமே முகூர்த்தத்தில் பங்கேற்றனர். பிருதிவிராஜை வேறு பல நடிகைகளுடன் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்று பலத்த பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.

ரகசியமாக திருமணம் நடந்ததால் சக நடிகர், நடிகைகள் பிருதிவிராஜ் மேல் கோபத்தில் இருந்தனர். இதையடுத்து எல்லோரையும் அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை விமரிசையாக கொண்டாட விரும்பினார்.

எர்ணாகுளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிறைய நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு அனுப்பியும் பலர் போகவில்லை என கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் மனைவி பூர்ணிமாவுடன் நேரில் சென்று வாழ்த்தினார். நடிகர் பிரகாஷ்ராஜூம் நேரில் வாழ்த்து கூறினார். மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலர் திருமண வரவேற்பில் பங்கேற்று வாழ்த்தினர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts