background img

புதிய வரவு

கார்த்தியின் அடுத்த ஆட்டம் 'சகுனி'

கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு தனது புதிய படத்தில் நடிக்கக் கிளம்பி விட்டார் கார்த்தி.

கடைசியாக கார்த்தி நடித்த படம் சிறுத்தை. இப்படத்திற்குப் பிறகு அடுத்த படமாக சகுனியில் நடிக்கிறார் கார்த்தி.

புதியவரான ஷங்கர் தயாள் சர்மா இயக்கும் இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பி.ஜி. முத்தையா கேமராவைக் கையாளுகிறார், ஆர்ட்டைக் கவனிக்கிறார் ராஜீவன்.

கடந்த வாரம்தான் கார்த்திக்கும், கோவையைச் சேர்ந்தவரான ரஞ்சனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது நடந்த கையோடு நடிக்க கிளம்பி விட்டார் கார்த்தி.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். சிறுத்தையைப் போலவே இதுவும் பக்கா மசாலாப் படமாம்.

படத்திற்கான நாயகி இதுவரை முடிவாகவில்லை. அவரைத் தேடி வருகிறார்களாம். யாராவது மும்பை முகம் நாயகியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts