background img

புதிய வரவு

தமிழ் சினிமா மீது நமீதாவுக்கு கோபம்!

தமிழ் சினிமாவில் தன்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர். இது எனக்கு பிடிக்கவில்லை, இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கோபத்துடன் கூறுகிறார் நடிகை நமீதா.

விஜயகாந்தின் "எங்கள் அண்ணா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை நமீதா. முதல்படத்தில் சற்று ஹோம்லியாக நடித்தாலும் அதற்கடுத்து வந்த மற்ற படங்களில் எல்லாம் தன்னுடைய அதிரடி கவர்ச்சியால், தமிழக ரசிகர்களை கிரங்க வைத்தார். குறிப்பாக ரசிகர்களை பார்த்து அவர் சொல்லும் "ஹாய் மச்சான்ஸ்..." என்ற வார்த்தை, ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு புத்துணர்ச்சியே தருவது போல் இருந்தது. இப்படி ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட நமீதா, ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து, பின்னர் கெஸ்ட் ரோலில் வந்து கடைசியாக குத்துபாட்டு ஆடும் ரேஞ்சுக்கு வந்துவிட்டார். இதனால் தமிழ் சினிமாவை விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிரம் காட்டி வரும் நமீதா, கன்னடத்தில் மட்டும் புதிதாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதேநேரம் தமிழில் வாய்ப்புகள் வந்தால் அதை புறக்கணிக்கும் விதமாக ஒரு சுவாரஸ்யமில்லாமல் கதை கேட்டு வருகிறாராம். ஆனால் நிறைய விளம்பரங்கள், கதை திறப்பு விழாக்கள் என்றால் உடன் ஓ.கே., சொல்லி விடுகிறார். தமிழ் சினிமாவை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று கேட்டால், தமிழ் சினிமாவில் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே காட்டி வருகின்றனர். இது எனக்கு பிடிக்கவில்லை. கதையோடு கூடிய கவர்ச்சி மட்டும் தான் எடுபடும். மற்ற நேரங்களில் அது எடுபடாது. தமிழில் இனிமேல் நல்ல கதையம்சமும், திறமையான இயக்குநரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறுகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts