background img

புதிய வரவு

பெங்களூரு அணி அசத்தல் வெற்றி! * மீண்டும் கெய்ல் சூறாவளி * கொச்சி அணி பரிதாபம்

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில், கிறிஸ் கெய்ல் மீண்டும் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய ஜெயவர்தனா அணி, பரிதாபமாக தோல்வி அடைந்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கொச்சி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, பேட்டிங் தேர்வு செய்தார்.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
இப்போட்டிக்கான இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கொச்சி அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு, சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவார் வாய்ப்பு பெற்றார். பெங்களூரு அணியில் ஆசாத் பதான் நீக்கப்பட்டு, புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.
கிளிங்கர் அபாரம்:
முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணிக்கு மைக்கேல் கிளிங்கர், பிரண்டன் மெக்கலம் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. கிறிஸ் கெய்ல் ஓவரில் இரண்டு "பவுண்டரி' <உட்பட 12 ரன்கள் எடுத்த மெக்கலம் (22), வெட்டோரி சுழலில் சிக்கினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளிங்கர் (24), கிறிஸ் கெய்ல் பந்தில் போல்டானார்.
"மிடில்-ஆர்டர்' ஏமாற்றம்:
அடுத்து வந்த கேப்டன் மகிளா ஜெயவர்தனா (3) சோபிக்கவில்லை. மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்த பார்த்திவ் படேல் (19), "ரன்-அவுட்' ஆனார். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய பிராட் ஹாட்ஜ் (5), கோமஸ் (7), வினய் குமார் (3) உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரவிந்திர ஜடேஜா (23) ஆறுதல் அளித்தார். கொச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் அரவிந்த், வெட்டோரி தலா 2, ஜாகிர், கெய்ல், மிதுன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கெய்ல் புயல்:
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, கிறிஸ் கெய்ல் புயல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரிலேயே தனது "சிக்சர்' கணக்கை துவக்கிய கெய்ல், பரமேஸ்வரன் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில், நான்கு "சிக்சர்', மூன்று "பவுண்டரி' உட்பட 37 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ரன் குவித்த கெய்ல், 16 பந்தில் 44 ரன்கள் (5 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து, வினய் குமார் வேகத்தில் போல்டானார்.
தில்ஷன் அபாரம்:
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ரமேஷ் பவார் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில், ஒரு "சிக்சர்', மூன்று "பவுண்டரி' உட்பட 20 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லியுடன் இணைந்து தொடர்ந்து அசத்திய இவர், தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராத் கோஹ்லி, பரமேஸ்வரன் பந்தில் "சூப்பர் பவுண்டரி' அடித்து வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தில்ஷன் (52 ரன்கள், 31 பந்து), கோஹ்லி (27) அவுட்டாகாமல் இருந்தனர். கொச்சி அணி சார்பில் வினய் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கோர்போர்டு
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
கிளிங்கர் (ப)கெய்ல் 24(25)
பிரண்டன் (கே)சப்-அருண் (ப)வெட்டோரி 22(16)
பார்த்திவ் -ரன் அவுட்-(கைப்/டிவிலியர்ஸ்) 19(14)
ஜெயவர்தனா (கே)டிவிலியர்ஸ் (ப)வெட்டோரி 3(7)
ஹாட்ஜ் (கே)ஜாகிர் (ப)அரவிந்த் 5(12)
ஜடேஜா (கே)கைப் (ப)மிதுன் 23(22)
கோமஸ் (கே)கோஹ்லி (ப)அரவிந்த் 7(15)
வினய் (கே)வெட்டோரி (ப)ஜாகிர் 3(3)
பவார் -அவுட் இல்லை- 8(6)
ஆர்.பி. சிங் -ரன் அவுட்-(டிவிலியர்ஸ்) 0(0)
பரமேஸ்வரன் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில், 9 விக்.,) 125
விக்கெட் வீழ்ச்சி: 1-43(பிரண்டன்), 2-64(கிளிங்கர்), 3-72(ஜெயவர்தனா), 4-73(பார்த்திவ்), 5-89(ஹாட்ஜ்), 6-106(கோமஸ்), 7-115(வினய்), 8-122(ஜடேஜா), 9-122(ஆர்.பி. சிங்).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-26-1, அரவிந்த் 4-0-20-2, கெய்ல் 4-0-26-1, வெட்டோரி 4-0-24-2, மிதுன் 3-0-21-1, தில்ஷன் 1-0-8-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
கெய்ல் (ப)வினய் 44(16)
தில்ஷன்- -அவுட் இல்லை- 52(31)
கோஹ்லி -அவுட் இல்லை- 27(33)
உதிரிகள் 5
மொத்தம் (13.1 ஓவரில், 1 விக்.,) 128
விக்கெட் வீழ்ச்சி: 1-67(கெய்ல்)
பந்துவீச்சு: ஆர்.பி. சிங் 2-0-13-0, பவார் 2-0-27-0, பரமேஸ்வரன் 2.1-0-44-0, வினய் 3-0-18-1, ஜடேஜா 4-0-24-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts