background img

புதிய வரவு

முஷாரபை கைது செய்ய கோர்ட் 2 வாரம் கெடு

இஸ்லாமாபாத்:பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்ய அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு, பயங்கரவாத வழக்கு விசாரணை விசேஷ கோர்ட் இரண்டு வார கெடு விதித்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2007ம் ஆண்டு தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு, இஸ்லாமாபாத்தில் இதற்கான விசேஷ கோர்ட்டில் நடக்கிறது. பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறியதாக முஷாரப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, சிறப்பு கோர்ட் நீதிபதி ராணா நிசார் அகமது உத்தரவிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அது முதல் கொண்டு ஒவ்வொரு முறையும் அரசு வக்கீல் இந்த விஷயத்தில் கால அவகாசம் கோரி வந்தார்.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் செய்யப்படாததால் முஷாரபை கைது செய்யும் விஷயத்தில் இந்த நாடுகள் ஒத்துழைக்க மறுப்பதாக அரசு வக்கீல் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அரசு வக்கீல் மேலும் அவகாசம் கோரினார்.ஆனால், இதற்கு மேல் முஷாரபை கைது செய்ய கால அவகாசம் அளிக்க முடியாது. இரண்டு வாரத்துக்குள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என, எப்.ஐ.ஏ.,வுக்கு கோர்ட் எச்சரித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts