background img

புதிய வரவு

மன்மோகன் ஆட்சி மோசமானது: அத்வானி

இப்போது நடைபெற்று வரும் மன்மோகன் சிங்கின் ஆட்சி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகமோசமான ஆட்சி என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி,


2008ம் ஆண்டில் ஆட்சிக்கு ஆதரவாக எம்.பி.களை விலைக்கு வாங்கி லஞ்ச, ஊழலை பெரிய அளவில் தொடங்கியது மன்மோகன் அரசு. தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஊழல் செய்து, எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கோடிகளை சுருட்டியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு. அரசியல்வாதியாக இல்லாத மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்தபோது நான் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் மிகமிக மோசமாக ஆட்சி நடத்துகிறார்.


1952ம் ஆண்டில் இருந்து நான் நமது நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சியை கவனித்து வருகிறேன். இதுவரை நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிதான் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts