background img

புதிய வரவு

சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: டெக்கான் அணி ஏமாற்றம்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சோபிக்கத்தவறிய சங்ககரா அணி, தோல்வி அடைந்து ஏமாற்றியது.
இந்திய மண்ணில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
மார்கல் வருகை:
சென்னை அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. டிம் சவுத்தி, குலசேகரா நீக்கப்பட்டு ஆல்பி மார்கல், சுராஜ் ரந்திவ் வாய்ப்பு பெற்றனர். டெக்கான் அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. ரவி தேஜா, மன்பிரீத் கோனி, ஸ்டைன் நீக்கப்பட்டு ஹர்மீத் சிங், பிரக்யான் ஓஜா, டுமினி தேர்வு செய்யப்பட்டனர்.
ஹசி நம்பிக்கை:
முதலில் பேட்டிங் செய்த சென்னை கிங்ஸ் அணிக்கு முரளி விஜய் (3) ஏமாற்றினார். பின், சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்த மைக்கேல் ஹசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது, மைக்கேல் ஹசி (46) அரைசத வாய்ப்பை இழந்தார்.
ரெய்னா அரைசதம்:
பின், கேப்டன் தோனியுடன் இணைந்த ரெய்னா அதிரடியாக ரன் சேர்த்தார். ஹர்மீத் சிங் பந்தில் இரண்டு "பவுண்டரி' அடித்த ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் தனது 11வது அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது பிரக்யான் ஓஜா சுழலில், ரெய்னா (59 ரன்கள், 2 சிக்சர், 6 பவுண்டரி) சிக்கினார்.
"ஹாட்ரிக்' சிக்சர்:
பின், தோனியுடன் இணைந்த ஆல்பி மார்கல் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் "ஹாட்ரிக் சிக்சர்' விளாசிய இவர், பந்தை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இவர், 6 பந்தில் 19 ரன்கள் எடுத்திருந்த போது, கேமிரான் ஒயிட்டின் துல்லிய துரோவில் "ரன்-அவுட்' ஆனார். பொறுப்புடன் ஆடிய தோனி (21), பிரக்யான் பந்தில் "ஸ்டெம்பிங்' ஆனார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (5), அனிருதா (3) அவுட்டாகாமல் இருந்தனர். டெக்கான் அணி சார்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.
சோகல் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சன்னி சோகல், ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சோகல், ரன் மழை பொழிந்தார். அஷ்வின் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில், ஒரு "சூப்பர் சிக்சர்' விளாசிய சோகல், 25 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 30 பந்தில் 56 ரன்கள் (4 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தபோது, ஜகாதி சுழலில் "போல்டானார்'. மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த ஷிகர் தவான் (19), ஜகாதி பந்தில் "போல்டானார்'.
சங்ககரா ஏமாற்றம்:
சிறிது நேரம் தாக்குப்பிடித்த பாரத் சிப்லி (17) நிலைக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சங்ககரா (15), போலிஞ்சர் வேகத்தில் "போல்டாகி' ஏமாற்றினார். ஆல்பி மார்கல் பந்தில் "சிக்சர்' அடிக்க முயன்ற ஒயிட் (13), டுமினி (17) பெவிலியன் திரும்பினர். கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 ரன்கள் மட்டுமே எடுத்த டெக்கான் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் ஆல்பி மார்கல் 3, போலிஞ்சர், ஜகாதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஆல்பி மார்கல் பெற்றார்.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
முரளிவிஜய் (ப)பிரக்யான் 3(14)
மைக் ஹசி (கே)இஷாந்த் (ப)ஹர்மீத் 46(41)
ரெய்னா (கே)தவான் (ப)பிரக்யான் 59(35)
தோனி (ஸ்டெம்)சங்ககரா (ப)பிரக்யான் 21(22)
ஆல்பி -ரன் அவுட்-(ஒயிட்/சங்ககரா) 19(6)
பத்ரிநாத் -அவுட் இல்லை- 5(2)
அனிருதா -அவுட் இல்லை- 3(2)
உதிரிகள் 9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 165
விக்கெட் வீழ்ச்சி: 1-18(முரளிவிஜய்), 2-78(மைக் ஹசி), 3-136(ரெய்னா), 4-157(ஆல்பி), 5-162(தோனி).
பந்துவீச்சு: டுமினி 3-0-21-0, கிறிஸ்டியன் 3-0-12-0, இஷாந்த் 4-0-41-0, பிரக்யான் 4-0-26-3, அமித் 3-0-34-0, ஹர்மீத் 3-0-26-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல் (ப)ஜகாதி 56(30)
தவான் (ப)ஜகாதி 19(27)
சிப்லி (கே)ஜகாதி (ப)ஆல்பி 17(15)
சங்ககரா (ப)போலிஞ்சர் 15(12)
ஒயிட் (கே)டுபிளசிஸ் (ப)ஆல்பி 13(18)
டுமினி (கே)மைக் ஹசி (ப)ஆல்பி 17(11)
கிறிஸ்டியன் -ரன் அவுட்-(தோனி) 1(1)
அமித் (கே)+(ப)போலிஞ்சர் 2(5)
இஷாந்த் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 146
விக்கெட் வீழ்ச்சி: 1-71(சோகல்), 2-90(தவான்), 3-110(சிப்லி), 4-121(சங்ககரா), 5-137(ஒயிட்), 6-143(டுமினி), 7-143(கிறிஸ்டியன்), 8-146(அமித்).
பந்துவீச்சு: ஆல்பி 4-0-38-3, போலிஞ்சர் 4-0-26-2, அஷ்வின் 4-0-23-0, ரந்திவ் 4-0-34-0, ஜகாதி 4-0-23-2.
ஆல்பி மார்கல் "50'
டெக்கான் அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்பி மார்கல் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார். இதுவரை இவர், 46 போட்டிகளில் பங்கேற்று 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 6வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் கொச்சி அணியின் ஆர்.பி. சிங் (50 போட்டி, 56 விக்.,) உள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts