"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து விசாரித்த பார்லிமென்டின் பொதுக் கணக்கு கமிட்டி, இந்த ஊழல் அரங்கேறியதற்கு காரணமே, பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பற்ற செயல் தான் காரணமென விமர்சித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க, பார்லிமென்டின் பொதுக் கணக்கு கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கமிட்டியின் தலைவர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி.இது பற்றி விசாரணை நடத்திய கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்த இருந்த நிலையில், காங்., - தி.மு.க., உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு அறிக்கை வெளிவராமல் முறியடித்துவிட்டனர். விசாரணை நடத்திய கமிட்டி பல முறைகேடுகளையும், என்ன நடந்தது என்பது பற்றி மனம் திறந்து விமர்சித்து இருந்தது தான் பிரச்னைக்கு காரணம்.இந்த ஊழல் அரங்கேறியதற்கு முழு முதற் காரணம், பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பற்ற செயல் தான்.ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியாகி , எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பிய போது, பிரதமர் மன்மோகன் சிங், இது குறித்து விசாரிக்கும் "பொதுக் கணக்கு கமிட்டி' முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், பொதுக் கணக்கு கமிட்டி தனது ஆய்வுக்கு பின், பிரதமர் அலுவலகம் மீது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. மத்திய தணிக்கை அதிகாரி கணக்குப்படி, இந்த ஊழலில் 1.76 லட்சம் கோடி தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், பி.ஏ.சி.,யோ 1.90 லட்சம் கோடி ரூபாய் இழப்பு இருக்கும் என்கிறது.கடந்த 2008ம் ஆண்டு புதிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்கள் மூலம் 1.24 லட்சம் கோடி ரூபாய் இழப்பும், சி.டி.எம்.ஏ., ஆபரேட்டர்களுக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கியதன் மூலம் 36 ஆயிரம் கோடி ரூபாயும், ஜி.எஸ்.எம்., ஆபரேட்டர்களுக்கு கூடுதல் அலைவரிசை (6.2 மெகாஹெர்ட்ஸ்க்கு மேல்) வழங்கியதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது என பட்டியலிட்டுள்ளது.
* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அப்போதைய அமைச்சர் ராஜா செய்த முறைகேடுகளை, பிரதமரின் கவனத்திற்கு பிரதமர் அலுவலகம் கொண்டு செல்ல தவறிவிட்டது. குறிப்பாக, ராஜா கடைபிடித்த முதலில் வருவோருக்கு முதல் ஒதுக்கீடு என்ற சந்தேகத்திற்குரிய முறையை பிரதமருக்கு தெரிவிக்காமல் போனதால் ராஜா பயன் அடைவதற்கு சாதகமாக அமைந்துவிட்டது.
* பிரதமர் அலுவலகத்திற்கு பாதி உண்மையை தெரிவித்தும், பாதியை மறைத்தும் ராஜா செயல்பட்டு, லஞ்சம் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை வளைத்து, ஒதுக்கீடு மற்றும் உரிமம் வழங்கியுள்ளார். குறிப்பாக, தொலைத்தொடர்புத் துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் டெலிகாம் கமிஷனையே தனக்கு சாதகமாக்கி, தனக்கு வேண்டிய கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.இந்த சூழ்நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கைகழுவி விடாமல், இதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதை கண்டறிய வேண்டும்.இவ்வாறு பி.ஏ.சி., அறிக்கையில் கருத்து கூறப்பட்டிருக்கிறது.

0 comments :
Post a Comment