டெல்லி: மமதா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் அமையவுள்ள ஆட்சியில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆட்சியில் இணையுமாறு காங்கிரஸுக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இதை காங்கிரஸ் ஏற்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், அனைத்தும் சாதகமாக நடந்து வருவதாகவே தெரிகிறது என்றார்.
இதற்கிடையே, ஆட்சியில் பங்கேற்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் கருத்தையும் அவர் கேட்டு வருகிறார்.
மமதாவின் திரினமூல் காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இருப்பினும் காங்கிரஸையும் ஆட்சியில் வந்து இணையுமாறு மமதா அழைப்பு விடுத்துளளார். அதேபோல எஸ்.யு.சி.ஐயையும் ஆட்சியில் இணையுமாறு அவர் அழைத்துள்ளார்.
சோனியாவுக்கு நேரில் அழைப்பு
Read: In English
இதற்கிடையே, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் அழைக்கவுள்ளார் மமதா. இதற்காக அவர் நாளை டெல்லி வருகிறார்.
இதுகுறித்து மமதா கூறுகையில், பிரதமர், சோனியா காந்தி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக நானும் பிரணாப் முகர்ஜியும் டெல்லி சென்று இருவரையும் நேரில் அழைக்கவுள்ளோம் என்றார்.

0 comments :
Post a Comment