ஐதராபாத்:ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, "பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை சில ஆண்டுகளுக்கு முன் துவக்கினார். ஆனால், இந்த கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சில சட்டசபை தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. கட்சியின் வளர்ச்சி தடைபட்டதால், அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துள்ளார்.ஆந்திராவில், முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு காங்., கட்சியில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லாத காரணத்தால், சிரஞ்சீவிக்கு முக்கியத்துவம் அளிக்க காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சிரஞ்சீவியை காங்., மேலிடம் நேற்று டில்லிக்கு அழைத்தது. அவர் நேற்று டில்லி சென்றார்.
0 comments :
Post a Comment