background img

புதிய வரவு

சுரேஷ் கல்மாடி சிறையில் அடைக்கப்பட்டார்

காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடியை 14 நாள் காவலில் வைக்கும்படி டெல்லிகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அவருடன் மேலும் 2 அதிகாரிகளும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் அப்போட்டியின் அமைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியின் பதவி பறிக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டி தொடர்பாக டைமிங் ஸ்கோர் ரிசல்ட் சிஸ்டம் அமைப்பதற்கு ஒரு சுவிஸ் நிறுவனத்துக்கு அளவுக்கு அதிகமாக ரூ.141 கோடிக்கு காண்டிராக்ட் விட்டதற்காக கல்மாடியிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் போட்டி அமைப்பு குழு துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த சுர்ஜித் லால், இணை டைரக்டர் ஜெனரலாக இருந்த ஏ.எஸ்.பிரசாத் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்கள் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 8 நாள் சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்ட அவர்கள் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கோர்ட்டில் ஆஜரான சி.பி.ஐ. வக்கீல் கூறுகையில், இந்த வழக்கில் விசாரணை முக்கியமான கட்டத்தை அடைந்து உள்ளது. சில முக்கியமான சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருக்கின்றன. இந்த கட்டத்தில் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் கல்மாடியும், மற்ற 2 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டால் அது விசாரணைக்கு நல்லது என்று குறிப்பிட்டார்.


நீதிபதி தர்மேஷ் சர்மா இதை ஏற்றுக்கொண்டார். அவர்கள் 3 பேரையும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts