background img

புதிய வரவு

அர்ஜென்டினாவில் விமான விபத்து; 22 பேர் கருகி பலி

அர்ஜென்டினாவில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ரியோநெக்ரா மாகாணத்தில் உள்ள நியூகுயனில் இருந்து கமோடொரோ ரிவாடாவியா நகருக்கு புறப்பட்டு சென்றது.

அதில் ஒரு குழந்தை உள்பட 19 பயணிகளும், 3 விமான ஊழியர்களும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்ட 45 நிமிடத்தில் தெற்கு அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா என்ற இடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது.

இதனால் தீப்பந்து போன்று எரிந்த நிலையில் தரையில் விழுந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 22 பேரும் உடல் கருகி பலியானார்கள். விமானத்தின் பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தூள் தூளாக நொறுங்கியது.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts