background img

புதிய வரவு

பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்-குணசீலம்

ஸ்தல வரலாறு:

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் குணசீலம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.

தாயாருக்கு என்று தனி சன்னதி இல்லை. பெருமாளின் மார்பில் தாயார் அலமேலுமங்கை அமர்ந்து அருள்பாலிப்பதே அதற்கு காரணம். குணசீல மகரிஷி தவம் செய்த இடம் இது என்பதால் இந்த ஊரும் குணசீலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மகரிஷியின் விருப்பப்படி மகாவிஷ்ணு, பிரசன்ன வெங்கடாஜலபதியாக இங்கே அருள்பாலித்து வருகிறார்.

சிறப்புகள்:

திருப்பதிக்கு, சூழ்நிலைகள் காரணமாக செல்ல முடியாதவர்கள், அந்த பிரார்த்தனையை இந்த திருத்தலத்தில் செலுத்தலாம் என்கிறார்கள். இந்த கோவிலில் மனநிலை பாதிப்பு உள்ளவர்கள் 48 நாட்கள் தங்கி, காலை, மாலை இரு வேளைகளிலும் காவிரியில் நீராடி பெருமாளை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

பூஜை நேரத்தின்போது மனநிலை பாதிப்பு உள்ளவர்களை வரிசையாக நிற்க வைத்து, அவர்களுக்கு சுவாமியின் பிரசாதத்தை கொடுக்கிறார்கள். இந்த வழிபாட்டின் மூலம் அவர்களது மனநிலை பாதிப்பு குணமாகும் என்று நம்பப்படுகிறது.

போக்குவரத்து வசதி :

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சி சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts