background img

புதிய வரவு

மே 13ல் இந்திய அணி தேர்வு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் தேர்வு, வரும் மே 13ல் சென்னையில் நடக்கிறது.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் (வரும் மே 28), இந்திய அணியினர் வரும் ஜூன் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகின்றனர். அங்கு ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் ஜூன் 4ல், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. அதன் பின் ஒருநாள் போட்டித் தொடர் வரும் ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியினரை, ஸ்ரீகாந்த தலைமையிலான தேர்வுக்குழுவினர், வரும் 13ம் தேதி சென்னையில் தேர்வுசெய்ய உள்ளனர். தவிர, டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான (மே 12) ஐ.பி.எல்., லீக் போட்டியில், பங்கேற்கும் கேப்டன் தோனியும், அணித் தேர்வில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20 முதல் ஜூலை 10 வரை) பங்கேற்கும் அணி, பின்னர் அறிவிக்கப்படும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts