சென்னை: தமிழக அரசு, மக்கள் நலப் பணிகளையும், திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு பிரதமர், மத்திய நிதி அமைச்சர், உலக வங்கி, வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்து வருவதாக, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலப் பணிகள் மற்றும் திட்டங்களை புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் கோவையில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையை குறிப்பிட்டுள்ள அவர், "முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீண்ட கால கண்ணோட்டத்துடன் செயல்படுத்தி வரும் பல்வேறு வகையான திட்டங்கள், தமிழகத்தை பல வழிகளிலும் குறிப்பாக, ஊரக வளர்ச்சி, வேளாண்மை சீரமைப்பு ஆகியற்றில் மாதிரி மாநிலமாக மாற்றியிருக்கிறது' என, பிரதமர் பாராட்டியுள்ளதை குறிப்பிட்டு உள்ளார். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்தியாவில் நிதி ஒழுங்கும், நிலைத் தன்மையும் திருப்திகரமாக கடைபிடித்து வரும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும்' என சுட்டிக் காட்டியிருப்பதைக் கூறியுள்ளார். வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்ததற்காக 2010ம் ஆண்டின், "இந்தியா டுடே' விருதும், வளர்ச்சிப் பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக, "வைர மாநிலம்' விருதும் தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.
வறுமை ஒழிப்பு மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய செயல்படுத்தி வரும், "வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை' உலக வங்கியின் முன்னாள் செயலாக்கத் தலைவர் மீனா முன்ஷி பாராட்டி உள்ளார் என்றும், அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டு உள்ளார். மேலும், வாகன உற்பத்தி தொழிலுக்கு உதவும் வகையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு வசதிகள் குறித்து, "வால் ஸ்டீரிட் ஜர்னல்' என்ற வெளிநாட்டு பத்திரிகை பாராட்டியுள்ளதாகவும், அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment