கடப்பா : ஆந்திராவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது தாய் விஜயலட்சுமியும் அதிகப்படியான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று உள்ளனர். ஆந்திராவில், முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவையடுத்து, அவரது மகனும், கடப்பா தொகுதியின் எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எழுந்த கருத்து வேறுபாடுகளால், எம்.பி., பதவியை ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்தார். அதுபோல், புலிவெந்துலா தொகுதியில் அவரது தாய் விஜயலட்சுமியும் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்த இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. ஜெகன் மோகன் ரெட்டி, 5 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதுபோல், காங்கிரஸ் வேட்பாளர் விவேகானந்தா ரெட்டிக்கு எதிராக போட்டியிட்ட விஜயலட்சுமியும், 27 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
0 comments :
Post a Comment