புதுச்சேரி : புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கதிர்காமம், இந்திராநகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். இந்திரா நகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்.,வேட்பாளர் ஆறுமுகத்தை விட, ரங்கசாமி கூடுதலாக 16,677 ஓட்டுகள் பெற்றார். கதிர்காமம் தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளை விட, ரங்கசாமி 9,757 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரங்கசாமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரங்கசாமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment