background img

புதிய வரவு

கேரள சட்டசபை காங். தலைவராக உம்மன் சாண்டி தேர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. அதில் சட்டசபபை கட்சித் தலைவராக உம்மன் சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரள சட்டசபை தேர்தலில் 72 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி மிக குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதில் காங்கிரஸ் 38 தொகுதியிலும், முஸ்லீம் லீக் 20 தொகுதியிலும், கேரள காங்கிரஸ் (எம்) 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோர உள்ளது. இதற்காக காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக உம்மன் சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிக மிக மெல்லிய மெஜாரிட்டியையே காங்கிரஸ் பெற்றுள்ளதால் காலத்தைத் தள்ளுவது கடினம் என்று கருதிய சென்னிதலா முதல்வர் பதவிக்கு ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து சாண்டி தேர்வானார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts