background img

புதிய வரவு

உலக பொருளாதாரத்தை சீர்குலைக்க எண்ணை கப்பல்களை தகர்க்க பின்லேடன் திட்டம் தீட்டியிருந்தார்; அமெரிக்கா தகவல்

உலகை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்கா உளவுத்துறை நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதில், பின்லேடன் தீட்டி இருந்த சதி திட்டம் பற்றிய பல அதிர்ச்சிகள் இருந்தன. அதில், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் அட்லாண்டிக்கடல் பகுதியில் செல்லும் எண்ணை கப்பல்களை கடத்தி அவற்றை தகர்க்க அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. அதற்கான மிகப்பெரிய சதி திட்டத்தை பின்லேடன் தயாரித்து இருந்தார்.

இதை கடந்த ஆண்டு கோடை காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தார்.இதன் மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணை விலை தாறுமாறாக உயரும். இதனால் உலக பொருளாதாரம் சீரழிந்து பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என பின்லேடன் கருதினார். ஆனால், கப்பல்களை தகர்க்கும் கடல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்வதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என கருதி அதற்கு மறுத்து விட்டார். அல்கொய்தா தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இவ்வாறு அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்கா உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts