2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கனிமொழி மீதான கைது நடவடிக்கையின் காரணமாக, அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில், மத்திய மந்திரி மு.க.அழகிரி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 3-வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாகவும், பொதுவான அரசியல் நிலவரம் குறித்தும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட நேரம் விவாதித்ததாக தெரிகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அந்த விருந்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.யை மட்டும் கலந்து கொள்ள செய்வது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது.
மேலும், கனிமொழி எம்.பி.யை பார்க்கவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் கருணாநிதி நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 comments :
Post a Comment