background img

புதிய வரவு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரிப்பு நள்ளிரவு முதல் அமல்

கடந்த ஜுன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வந்தன. இருந்தபோதிலும், விலை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசின் அதிகாரபூர்வமற்ற வழிகாட்டுதலின்படி எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசின் ஆலோசனைப்படி பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலே, இந்த நடவடிக்கைக்கு காரணமாகும். தற்போது 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது .

இந்நிலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாயாக உள்ளது

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts