background img

புதிய வரவு

பூசணிக்காய் தோசை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கோப்பை
துறுவிய மஞ்சள் பூசணி - 1 கோப்பை
உளுத்தம் பருப்பு - 1/4 கோப்பை
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை இளம் சூடான தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து மெத்தென்று அரைக்கவும்.

உளுந்தை தனியாக ஊறவைக்கவும்.

பூசணியின் விதை, தோல், போன்றவற்றை நீக்கி துறுவி அளந்து கொள்ளவும்.

உளுந்தோடு பூசணி துறுவலையும் சேர்த்து நன்றாக மெத்தென்று அரைத்துக் கொள்ளவும்.

அரிசி, உளுந்து, அரைத்த மாவுகளை ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து வைக்கவும்.

மறுநாள் காலை வரை புளிக்க வைக்கவும்.

வாணலி அல்லது சூடான தோசைக் கல்லில் தோசையை சிறிது கனமாக வார்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு மூடிவைத்து ஒரு பக்கம் மட்டும் சுட்டு எடுக்கவும். (திருப்பிப் போட வேண்டாம)

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts