background img

புதிய வரவு

செசல்ஸ் தீவில் இளவரசர் வில்லியம் தம்பதி தேனிலவு கொண்டாட்டம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேத்மிடில்டன் திருமணம் கடந்த 29-ந்தேதி கோலாகலமாக நடந்தது. அவர்கள் தங்கள் தேனிலவு கொண்டாட்டத்தை தள்ளி வைத்து இருந்தனர்.

ஏனெனில் போட்டோ கிராபர்களின் தொல்லை இருக்கும். அதனால் கார் விபத்தில் பலியான இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட கதிதான் நேரிடும் என்ற அச்ச உணர்வு அரச குடும்பத்துக்கு இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இவர்களது தேனிலவு கொண்டாட்டம் செசல்ஸ் தீவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செசல்ஸ் தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அது மிகவும் அழகிய இடமாகும். இயற்கை சூழல் மிகுந்த அழகிய கடற்கரைகள் உள்ளன. தனி மனித சுதந்திரம் நிறைந்த இடம்.

இளவரசி கேத்மிடில்டன் இங்கு இதுவரை வந்ததில்லை. எனவேதான் இந்த இடத்தை தேனிலவு கொண்டாட்டத்துக்கு தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது.

இளவரசர் வில்லியம் தம்பதி தங்குவதற்காக இங்குள்ள ஒரு தீவில் மிகவும் ஆடம்பர பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் ஒருநாள் வாடகை ரூ.3 லட்சம்.

திருமணம் முடிந்ததும் இளவரசர் வில்லியம் விமானப்படை வேலைக்கு சென்று விட்டார். தற்போது அவர் ஏஞ்சலசி பகுதியில் தங்கியுள்ளார். தேனிலவுக்கான ஏற்பாட்டை செய்வதற்காக நாளை (4-ந்தேதி) அவர் லண்டன் திரும்ப உள்ளார்.

பின்னர், அவர் தனது காதல் மனைவி இளவரசர் கேத்மிடில்டனுடன் வருகிற 15-ந்தேதிக்கு பிறகு அங்கு புறப்பட்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டன.

இவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இளவரசரின் பாதுகாவலர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பே சென்று சோதனை செய்து திரும்பினர். அப்போதே இந்த ஆடம்பர பங்களாவும் “புக்” செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இளவரசர் வில்லியம் தம்பதி அங்கு 10 நாட்கள் தங்கி தேனிலவு கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts