background img

புதிய வரவு

புட்டுக்கு இணை பயறு

பு‌ட்டு செ‌ய்து‌வி‌ட்டு அ‌தி‌ல் தே‌ங்கா‌ய் ம‌ற்று‌ம் ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து சா‌ப்‌பிடுவோ‌ம். அத‌ற்கு வேறெ‌ன்ன இரு‌க்‌கிறது எ‌ன்று கூறுபவ‌ர்களு‌க்காக‌த்தா‌ன் இ‌ந்த பயறு செ‌ய்முறை.

ஒரு முறை ரு‌‌சி‌த்து ‌வி‌ட்டீ‌ர்களானா‌ல் எ‌‌ப்போது பு‌ட்டு செ‌ய்தாலு‌‌ம் அத‌ற்கு பயறு இ‌ல்லாம‌‌ல் சா‌ப்‌பிடவே மா‌ட்டீ‌ர்க‌ள்.

பச்சைப் பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
கறிவேப்பிலை
உ‌ப்பு
எ‌ண்ணெ‌ய், கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - தா‌ளி‌க்க

செய்யும் முறை:

பச்சைப் பயிறை 3 முதல் 4 மணி நேர‌ம் ஊற வையுங்கள்.

பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக விடுங்கள்.

பருப்பு குழைந்து விடாமல் பார்த்து இறக்கிக் கொள்ளவும்.

அதற்குள் தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் போட்டு அரைத்து வேகவைத்த பயறுடன் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். க‌றிவே‌ப்‌பிலையை அல‌சி‌ப் போடவு‌ம்.

அதில் வேகவைத்த பயறு கலவையை கொட்டி ஒரு கிளறு கிளறி 5 நிமிடம் சிறு‌தீயில் வைத்து இறக்கி விடவும். புட்டுக்கு இது மிகவும் ஏற்ற இணை உணவாகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts