background img

புதிய வரவு

தமிழக தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை: ப. சிதம்பரம்

மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார். சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரசார் பக்குவமாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றார் சிதம்பரம். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் பல புகார்களைத் தெரிவித்தனர்.

மானாமதுரை தொகுதியில் திமுகவினர் தங்களை அரவணைத்துச் செயல்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts