background img

புதிய வரவு

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்பட்சத்தில், தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார். சொல் பேச்சு கேட்கும் கட்சிகளை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை கழற்றி விடும் முடிவில் உள்ள அவர், சீனியர் மாவட்ட செயலர்களுக்கு, இம்முறை அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2006 வரை ஆட்சிக்கட்டிலில் இருந்த அ.தி.மு.க., வுக்கு, இம்முறை மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர். தி.மு.க., அரசு மீதான குற்றச்சாட்டுக்கள், அ.தி.மு.க.,வின் கூட்டணி பலம் ஆகியவை அவர்களுக்கு வெற்றியை தேடித்தரலாம். சிறு, குறு கட்சிகளை சேர்த்துக் கொண்டு, சட்டசபை தேர்தலில் களம் கண்ட ஜெயலலிதா, "வெற்றி நமதே' என்ற நம்பிக்கையில் உள்ளார்.தே.மு.தி.க., வைப் பொறுத்தமட்டில் கூட்டணியில் இருந்தாலும், அது பெயரளவுக்கு மட்டுமே என அ.தி.மு.க.,வினர் கூறிவருகின்றனர். அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்போது, தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கழற்றி விட்டு, சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓய்வுக்காக கோடநாடு சென்றுள்ள அவர், ஆட்சி அமைப்பது, அமைச்சர் பட்டியல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.தி.மு.க.,வை காட்டிலும், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச் சரவை விசாலமாக இருக்கும். 35 பேர் வரை அமைச்சர் பட்டியலில் இடம் பெறக்கூடும். மாநில நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மாவட்ட செயலர்களில், சீனியர், எந்தவித புகாருக்கும் இடம் தராமல், கட்சி தாவாமல், ஒதுக்கிய தொகுதிகளில் வெற்றிகளை தேடித்தந்தவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts