திமுக அடைந்த தோல்வி, மக்களுக்கு கிடைத்த தோல்வி என்று நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்திய நடிகை குஷ்பு, பின்னர் திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவுக்காக மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் எல்லாம் குஷ்பு என்ற நடிகையை பார்க்கத்தான் மக்கள் கூடினார்கள் என்பது தெரியாமல் தமிழை கொலை செய்து, தாறுமாறாக பேசி, தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பை சம்பாதித்த குஷ்பு, தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக அமைந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தேர்தல் முடிவு வெளியாகி திமுக தோல்வியடைந்ததும் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்த குஷ்பு, அங்கு கருணாநிதியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டார். அப்போது தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த குஷ்பு, இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. மாறாக மக்கள்தான் தோல்வி அடைந்துள்ளனர். 2ஜி வழக்கு குறித்து மீடியாக்கள் தவறான செய்திகளை வெளியிட்டன. இதனால்தான் திமுகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அவை பொய் என்பதை நாங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிப்போம், என்றார்.
0 comments :
Post a Comment