background img

புதிய வரவு

டில்லி கோர்ட்டில் கனிமொழி ஆஜர்: இன்றும் நீடிக்கிறது விசாரணை

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில், தி.மு.க., எம்.பி.,க்கள் புடைசூழ கனிமொழி ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ஜெத்மலானி, ""கனிமொழிக்கு இந்த விஷயத்தில் நேரடித் தொடர்பு இல்லை,'' என, வாதாடினார். நீதிபதி சைனி , ""இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதே நிலை நீடிக்கும்,'' என்றார். இன்றும் வழக்கு விசாரணை நீடிப்பதால், கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது இன்றுதான் தெரியவரும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கனிமொழி, டில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டிற்கு நேற்று வந்திருந்தார். அவருடன், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு உட்பட 11 எம்.பி.,க்கள் வந்தனர். நீதிபதி சைனி முன்பாக வாதிட்ட வக்கீல் ராம்ஜெத்மலானி கூறியதாவது: கனிமொழிக்கு சம்மன் அனுப்பியாகி விட்டது. அவர் ரெகுலராக கோர்ட்டிற்கு வந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறரா என்பதைத்தான் பார்க்க வேண்டும். உத்தரவாதம் பெற்று அவரை ஜாமினில் விடுக்க வேண்டும். ஜாமின் கேட்பது என்பது அவரது பிறப்புரிமை. சுப்ரீம் கோர்ட்டும் சரி, அலகாபாத் ஐகோர்ட் உள்ளிட்ட பிற கோர்ட்டுகளும் இதை ஏற்கனவே உறுதி செய்துள்ளன.

கலைஞர் "டிவி'யில், கனிமொழி வெறும் பங்குதாரர் மட்டுமே. அதுவும் பெரிய அளவிலான பங்குதாரரும் இல்லை. வெறும் 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். அதன்படி பார்த்தால், கலைஞர் "டிவி' சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆவணங்களிலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி'யில் ஆரம்ப காலத்தில், கனிமொழி ஒரு இயக்குனராக இருந்தார். அதன்பின் அந்தப் பதவியில் இருந்தும் விலகி விட்டார். அதன்பிறகு "டிவி' தொடர்பான நடவடிக்கைகளில் அவர் பெரிதும் ஈடுபடவில்லை. கனிமொழி அப்பாவி. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கலைஞர் "டிவி' தொடர்பான எந்த போர்டு மீட்டிங், ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை.

கலைஞர் "டிவி' உருவாவதற்கு அடித்தளமே கனிமொழி என்ற சி.பி.ஐ., யின் குற்றச்சாட்டு தவறானது. மேலும், ராஜா மூலமாக கலைஞர் "டிவி'க்கு ரூ.200 கோடி வந்தது என்று கருதப்பட்டாலும், அதில் கனிமொழிக்கு சம்பந்தம் என்ன இருக்கிறது. அந்தப் பணவரவு குறித்து எந்த ஆவணத்திலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி' பற்றி முடிவெடுத்தது சரத்குமார் பொறுப்பாகும். மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு வேண்டுமானால், இந்த ஜாமின் மறுக்கப்படலாமே தவிர, மற்ற வழக்குகளில் ஜாமின் வழங்குவது சாத்தியமானதே. அதிலும் கூட பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் போன்ற காரணங்களுக்காகவும் ஜாமின் வழங்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதிட்டார். கோர்ட் அறை முழுவதும் பெரும் கூட்டம் நிரம்பி இருந்தது. இவருக்கு பிறகு, சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப், பல்வா வக்கீல் @பசினர். நேரம் ஆகிவிடவே தன் வாதங்களை நாளை (இன்று) வைப்பதாக சி.பி.ஐ., வக்கீல் லலித் கூறினார். அவரது வாதத்தை கேட்டபின் முடிவு எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதி சைனி அறிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts