background img

புதிய வரவு

திருச்சி, மதுரை, கோவையில் கவுன்சலிங் நடத்த வேண்டும்: வைகோ

சென்னை, மே 9: உயர் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை திருச்சி, மதுரை, கோவையிலும் நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று நிறைந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கி வாழ்வில் முன்னேற உறுதியேற்க வேண்டும். அதன் மூலம் பெற்றோருக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை நடத்தும் உயர் கல்விக்கான கலந்தாய்வு இப்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீண் அலைச்சலும், பொருள் செலவும் ஏற்படுகிறது. வசதி இல்லாதவர்கள் காலையில் சென்னைக்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து மாலையிலேயே ஊர் திரும்புகின்றனர்.
தகவல் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் சென்னையில் மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் கலந்தாய்வை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts