ஸ்தல வரலாறு:
காசியிலே விசாலாட்சியாக, மதுரையிலே மீனாட்சியாக, காஞ்சியிலே காமாட்சியாக, திருவல்லிக்கேணியில் அருள் தரும் தாயாக எல்லம்மன் காட்சி தருகிறாள். 300 ஆண்டுகளுக்கு முன் எல்லம்மன் ஆலயம் தோன்றியதாக செய்திகள் உண்டு.
கோவிலில் உள்ளே சென்றதும் முதலில் கொடிமரம், பிறகு கிழக்கு முகம் பார்த்த வண்ணமாக காட்சித் தரும் எல்லம்மனை காணலாம். சக்தி விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி சன்னதி, வன்னி மரம், நாகதேவியர் சன்னதி, எல்லம்மன் உற்சவ சன்னதி, பக்த ஆஞ்சநேயர் சன்னதி இவைகள்யாவும் இங்கு உள்ளது.
சிறப்புகள்:
இங்கு ஆடி மாதம் பிரம்மோற்சவம் 13 நாட்கள் சிறப்பாக நடைபெறும் நவராத்திரி, கந்த சஷ்டி விழா, சித்திரையில் ஆயிரத்தெட்டு அபிஷேகம் சிறந்த முறையில் நடக்கிறது.
பிள்ளைப் பேறு, திருமணம் நடக்க, நோய் நொடிகள் தீர, கடன் தொல்லைகள் விலக, புகழ் பெற, எல்லாவித பிரச்சினைகளுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் இங்கு வந்து வணங்கினால் நன்மைகள் பெருகி கேட்டவரம் கிடைக்கும்.
சர்க்கரை வியாதி கொண்டவர்கள் அந்நோய் தீர அம்மனை வேண்டி அம்மனுக்கு சர்க்கரை காப்பால் அலங்காரம் செய்து வியாதி தீர்த்துள்ளார்கள்.
போக்குவரத்து வசதி:
இந்த ஆலயம் 48, சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5ல் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

0 comments :
Post a Comment