இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி விளையாட்டு மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது தவிர விளம்பர படங்களில் நடிப்பதால் மேலும் கோடிக்கணக்கில் பணம் குவிகிறது. மதுபான விளம்பரங்களிலும் டோனி நடித்துள்ளார். அவர் மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
மதுபான விளம்பரத்தில் இருந்து டோனி விலக வலியுறுத்தி பசுமை தாயகத்தினர் இன்று அடையார் பார்க்ஷெரட்டன் ஓட்டல் முன்பு திரண்டனர். அங்கு தங்கி இருந்த டோனிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பசுமை தாயக மாநில செயலாளர் இரா.அருள் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்களை தியாகராயநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

0 comments :
Post a Comment