background img

புதிய வரவு

கின்னஸ் சாதனை புரிந்த நடிகர் அலெக்ஸ் மரணம்

நடிகராக மட்டுமல்லாமல் மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று, அதில் உலக சாதனையும் படைத்துள்ள நடிகர் அலெக்ஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 52.

திருச்சியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி படத்தின் மூலம் நடிகரானவர். நடிக்க வருவதற்கு முன்பே மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று சிறந்த மாஜிக் கலைஞராக திகழ்ந்தவர்.

ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் அலெக்ஸ். அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அலெக்ஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அவருடைய உடல் உடனடியாக திருச்சி கொண்டு செல்லப்பட்டது. இன்று உடல் அடக்கம் நடைபெறுகிறது. அலெக்ஸுக்கு திரவிய மேரி என்ற மனைவியும், பிரின்சி, டீனா என இரு மகள்களும் உள்ளனர்.

அலெக்ஸின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts