background img

புதிய வரவு

ஒபாமாவுக்கு செல்வாக்கு அதிகரிப்பு!

வாஷிங்டன், மே 4: வாக்குறுதி அளித்தபடி வரிகளைக் குறைக்கவில்லை, வசதியைப் பெருக்கவில்லை, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை, பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் பராக் ஒபாமா மீது அதிருப்தியாக இருந்த அமெரிக்கர்கள், பின் லேடனைவெற்றிகரமாகக் கொன்றுவிட்டார் என்றதும் ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர்.
இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டாம். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.
"யு.எஸ்.ஏ. டுடே' நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின் லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது சரியான செயல் என்று 90% அமெரிக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைப் பொருத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79% அமெரிக்கர்கள் கருதுகின்றனர். பின் லேடன் கொல்லப்பட்டதைத் தாங்கள் அங்கீகரிப்பதாக 93% அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது 2001 அக்டோபர் 7-ம் தேதி நடத்திய இதே போன்ற கருத்துக் கணிப்பின்போது 90% அமெரிக்கர்கள் அதை ஆதரித்தனர். 1991-ல் வளைகுடாப் போரில் அமெரிக்கா இறங்கியபோதும் 2003-ல் இராக் மீது படையெடுத்த போதும்கூட சுமார் 70% அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90%-க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடனைக் கண்டுபிடித்துக் கொலை செய்ததில் முக்கியப் பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும் சி.ஏ.ஐ.வுக்கும்தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரைவிட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35%தான். ஓரளவுக்கு அவருக்குப் பங்கு என்கிறவர்கள் 36%. அவருடைய
பங்கு அதிகம் இல்லை என்று கருதுகிறவர்கள் 25%.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts