background img

புதிய வரவு

கத்திரி வெயில் தொடங்கியது: திருத்தணியில் 109 டிகிரி தமிழகம் தகித்தது

சென்னை, மே 4: தமிழகத்தில் கத்திரி வெயிலின் தொடக்க நாளான புதன்கிழமை, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 ஊர்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி வெயில் தகித்தது.
திருப்பதியிலும் 109 டிகிரி வெயில்: இந்த ஆண்டில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி அளவாக வெயில் சுட்டெரித்தது. இதேபோல, ஆந்திரத்தில் நிஜாமாபாத், திருப்பதி ஆகிய இடங்களிலும் இதே அளவு வெயில் கொளுத்தியதோடு, அனல் காற்று வீசியது.
இதர முக்கிய இடங்களில் புதன்கிழமை பதிவான வெப்பநிலை (டிகிரி
ஃபாரன்ஹீட்டில்):
திருநெல்வேலி, வேலூர் 106, சென்னை, திருச்சி 104, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், புதுச்சேரி 102, காரைக்கால், 100,சேலம், திருப்பத்தூர் 99, தருமபுரி 97, தூத்துக்குடி, கோயம்புத்தூர் 95.
கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் மழை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டிய போதும், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் அளவுக்கு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதற்கு அடுத்தபடியாக சங்ககிரி, பாலக்கோடு ஆகிய இடங்களில் 80 மில்லி மீட்டர் மழை பெய்தது.
இதர இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):
மாரண்டஹல்லி, கரூர் பரமத்தி, சூளூர் (கோவை மாவட்டம்) 70, ஏற்காடு 60, தாளவாடி 50, தருமபுரி, ஓகேனக்கல், அருப்புக்கோட்டை 40, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், வாடிப்பட்டி, மதுரை, வாழப்பாடி, ஆத்தூர், பவானிசாகர், சத்தியமங்கலம், குளித்தலை, பாப்பிரெட்டிபட்டி 30, ஊத்தங்கரை, தளி, கிருஷ்ணகிரி, கோபிச்செட்டிபாளையம், பென்னாகரம், ராசிபுரம், சேலம் 20, கொடைக்கானல், பழனி, வேடசந்தூர், அரூர், கரூர், மேட்டுப்பாளையம், அன்னூர், துறையூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி 10.
இன்று மழை பெய்ய வாய்ப்பு: தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நகரில், வியாழக்கிழமை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts