ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி, முரளி விஜய் அதிரடி கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பரிதாபமாக வீழ்ந்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 52வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
பிராவோ வாய்ப்பு:
சென்னை அணியில் சூரஜ் ரந்திவ் நீக்கப்பட்டு, டுவைன் பிராவோ வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஷேன் வார்ன் வழக்கம் போல் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். மனேரியா வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் ஹசி. பின் அமித் சிங் வீசிய போட்டியின் 5வது ஓவரில் ஹசி 2 பவுண்டரி, விஜய் ஒரு பவுண்டரி அடித்தனர். வார்ன் சுழலில் விஜய் ஒரு இமாலய சிக்சர்(92 மீ., தூரம்) அடித்து அசத்தினார். போத்தா பந்தில் ஹசி(46) போல்டானார்.
விஜய் அரைசதம்:
தனது அதிரடியை தொடர்ந்த விஜய், போத்தா மற்றும் திரிவேதி பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். வார்ன் பந்தை தட்டி விட்டு சற்று மந்தமாக ஓடிய விஜய்(53) போத்தாவின் நேரடி "த்ரோவில்' துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
தோனி அதிரடி:
கடைசி கட்டத்தில் ரெய்னா, தோனி இணைந்து தூள் கிளப்பினர். திரிவேதி வீசிய போட்டியின் 17வது ஓவரில் தோனி ஒரு சூப்பர் சிக்சர், 2 பவுண்டரிகள் விளாச, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. வாட்சன் வீசிய அடுத்த ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரி மற்றும் தோனி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. அமித் சிங் வேகத்தில் ரெய்னா(43) அவுட்டானார். தொடர்ந்து அமித் சிங் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட தோனி, ஸ்கோரை மிக வேகமாக உயர்த்தினார். இப்படி "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் கலக்கலாக ஆட, சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. தோனி 41(3 பவுண்டரி, 3 சிக்சர்), ஆல்பி மார்கல்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரகானே ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி சொதப்பலாக ஆடியது. அனுபவ டிராவிட்(20) விரைவில் வெளியேறினார். அஷ்வின் பந்தை வாட்சன்(11) அடிக்க...ஜகாதி தட்டுத்தடுமாறி பிடிக்க, சென்னை ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆல்பி மார்கல் வேகத்தில் ராஸ் டெய்லர்(6) சரணடைந்தார். மனேரியா(2) தாக்குப்பிடிக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரகானே(52) அரைசதம் கடந்த நிலையில், பிராவோ பந்தில் ரெய்னாவின் அசத்தல் "கேட்ச்சில்' நடையை கட்டினார்.
ராத் காயம்:
அடுத்து வந்த அபிஷேக் ராத் ஒரு சிக்சர் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த பிராவோ பவுன்சராக வீசினார். வேகமாக வந்த பந்து, ராத்தின் இடது முழங்கைக்கு கீழே பலமாக தாக்க, வலியால் சுருண்டு விழுந்தார். இதில் இருந்து மீண்ட ராத் தொடர்ந்து பேட் செய்தார். இவருக்கு "ரன்னராக' ரகானே செயல்பட்டார். ராத்(19) ரன் அவுட்டானார். போலிஞ்சர் வேகத்தில் யாக்னிக்(3), போத்தா(14) அடுத்தடுத்து வீழ்ந்தனர். ரெய்னா வீசிய கடைசி ஓவரில் அமித் சிங்(1), வார்ன்(0) வெளியேற, ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் தட்டிச் சென்றார்.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
மைக்கேல் ஹசி(ப)போத்தா 46(30)
விஜய்-ரன் அவுட்-(போத்தா) 53(40)
ரெய்னா(ப)அமித் சிங் 43(27)
தோனி-அவுட் இல்லை- 41(19)
ஆல்பி மார்கல்-அவுட் இல்லை- 5(4)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 3 விக்.,) 196
விக்கெட் வீழ்ச்சி: 1-77(மைக்கேல் ஹசி), 2-135(விஜய்), 3-179(ரெய்னா).
பந்துவீச்சு: மனேரியா 2-0-17-0, அமித் சிங் 4-0-40-1, வாட்சன் 4-0-47-0, போத்தா 4-0-23-1, வார்ன் 4-0-34-0, திரிவேதி 2-0-33-0.
ராஜஸ்தான் ராயல்ஸ்
வாட்சன் (கே)ஜகாதி(ப)அஷ்வின் 11(10)
டிராவிட்(கே)தோனி(ப)போலிஞ்சர் 20(16)
ரகானே(கே)ரெய்னா(ப)பிராவோ 52(36)
டெய்லர்(கே)சகா(ப)ஆல்பி மார்கல் 6(8)
மனேரியா(கே)தோனி(ப)அஷ்வின் 2(5)
போத்தா(கே)+(ப)போலிஞ்சர் 14(17)
ராத்-ரன் அவுட்-(அஷ்வின்) 19(14)
யாக்னிக்(ப)போலிஞ்சர் 3(7)
அமித் சிங்(கே)+(ப)ரெய்னா 1(2)
திரிவேதி-அவுட் இல்லை- 0(0)
வார்ன்(கே)பிராவோ(ப)ரெய்னா 0(2)
உதிரிகள் 5
மொத்தம்(19.3 ஓவரில் ஆல் அவுட்) 133
விக்கெட் வீழ்ச்சி: 1-27(டிராவிட்), 2-48(வாட்சன்), 3-63(டெய்லர்), 4-70(மனேரியா), 5-105(ரகானே), 6-129(ராத்), 7-132(யாக்னிக்), 8-133(போத்தா), 9-133(அமித் சிங்), 10-133(வார்ன்).
பந்துவீச்சு: ஆல்பி மார்கல் 3-0-21-1, போலிஞ்சர் 4-0-22-3, பிராவோ 4-0-36-1, அஷ்வின் 4-0-24-2, ஜகாதி 4-0-30-0, ரெய்னா 0.3-0-0-2.

0 comments :
Post a Comment