background img

புதிய வரவு

தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.15 கோடி ஊழலா? ராம நாராயணன் மறுப்பு

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை. இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.

ஞாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட் டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ராமநாராயணன் கூறி உள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts