background img

புதிய வரவு

ஜெ தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா நேற்று மாலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கிய நிலையில், 33 அமைச்சர்களும் இன்று கோட்டையில் தங்களது பணிகளைத் தொடங்கினர்.

புதிய அமைச்சர்களை சந்திக்க அவர்களது ஆதரவாளர்கள் திரண்டுள்ளதால், கோட்டையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்:

இந் நிலையில் ஜெயலலிதா இன்று பகல் 2 முதல் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

இக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபைக் கூட்டம், பட்ஜெட் குறித்த விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சர்களுக்கு இன்னும் வீடுகள் தயாராகததால் அவர்கள் எம்எல்ஏ விடுதியில் தான் தங்கியுள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts