background img

புதிய வரவு

இந்தியாவில் 18 வயதுக்குள் திருமணம் செய்யும் இளம்பெண்கள்

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை சேர்ந்த மக்கள் தொகை விவர பீயுரோ என்ற அமைப்பு உலக பெண்கள் மற்றும் சிறுமிகள் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள 20 லிருந்து 24 வயது வரை உள்ள பெண்களில் 47 சதவீத பெண்கள் 18 வயதுக்குள்ளாகவே திருமணம் செய்கிறார்கள். இது தெற்கு மத்திய ஆசியாவின் 45 சதவீதத்தை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலானது. ஆப்பிரிக்காவிலோ 34 சதவீதமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் 43 சதவீதமும் பாகிஸ்தானில் 24 சதவீத சிறுமிகள் திருமணம் நடக்கின்றன.

கிராமபுறங்களில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுகின்றனர். இதனால் இவர்களது சகோதரிகள் பெரும்பாலும் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

எனவே அதிக நேரம் உள்ளதால் திருமணத்திற்கு முன் உறவுகள் வைத்துக் கொள்வதற்கு சாத்தியம் உண்டாகிறது. மேலும் திருமணம் ஆகாமலேயே குழந்தைப் பெற்றுக் கொள்ளும் நிலையும் தோன்றுகிறது.

இதை தடுக்கவே பெரும்பாலான பெற்றோர் பெண்களை கிராம புறங்களில் 18 வயதை தாண்டும் முன்வே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இந்தியாவில் ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், ஆந்திரா போன்ற மாநிலங்களில்தான் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts