background img

புதிய வரவு

நடிகர் தனுஷுக்கு தேசிய விருது

இந்தியாவில் இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இளம் தமிழ் நடிகரான தனுஷ். ஆடுகளம் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதேபோல், தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், சிறந்த நடிகைககான விருதுக்குத் தேர்ந்தெடு்ககப்பட்டுள்ளார்.

தனுஷூடன் இணைந்து, மலையாள நடிகர் சலிம் குமார், "ஆதாமிண்டே மகன் அபு" படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார்.

சரண்யாவுடன் இணைந்து, மராத்தி படத்துக்காக, மிடாலி ஜக்தப் வரத்கர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

ஆடுகளம் திரைப்படம் மொத்தம் 6 விருதுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், சிறந்த இயக்குநருக்கான விருது பெறுகிறார். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இந்தப் படத்துக்காக வெற்றிமாறன் பெறுகிறார்.

இதே படத்துக்காக, சிறந்த படத்தொகுப்பு விருது டி.ஆ. கிஷோருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடனத்துக்கான விருதும் இதே படத்துக்காக, தினேஷ்குமாருக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் மென்ஷன் எனப்படும் சிறப்பு அங்கீகாரத்துக்கான விருதை ஆடுகளம் படத்துக்காக வி.ஐ.எஸ். ஜெயராமன் பெறுகிறார்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை, மைனா என்ற தமிழ் படத்துக்காக தம்பி ராமையை பெறுகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதும் தமிழுக்குக் கிடைத்துள்ளது. நம்ம கிராமம் படத்துக்காக, சுகுமாரி அந்த விருதைப் பெறுகிறார்.

சிறந்த தயாரிப்பு டிசைனுக்கான விருது, எந்திரன் படத்துக்காக, சாபு சிரிலுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது, நம்ம கிராமம் படத்துக்காக, இந்திரன் ஜெயனுக்குக் கொடுக்கப்பட உள்ளது.

சிறந்த பாடலுக்கான விருது, தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்காக, வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பிரிவுக்கான விருது, எந்திரன் படத்துக்காக சீனிவாஸ் மோகனுக்கு கிடைத்துள்ளது.

தேசிய அளவில், சிறந்த திரைப்படமாக, "ஆதாமிண்டே மகன் அபு" என்ற மலையாளப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக, சல்மான்கான் நடித்த தபாங் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts