background img

புதிய வரவு

மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி! * பஞ்சாப் அணி "ஹாட்ரிக் தோல்வி

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய கில்கிறிஸ்ட் அணி, "ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது.
இந்திய மண்ணில், நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. "டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங் தேர்வு செய்தார்.
அம்பதி அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டேவி ஜேக்கப்ஸ் (10) சுமாரான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த அம்பதி ராயுடு, கேப்டன் சச்சினுடன் இணைந்து அதிரடியாக ரன் சேர்த்தார். பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த அம்பதி, பியுஸ் சாவ்லா பந்தில் ஒரு "சூப்பர் பவுண்டரி அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 37 பந்தில் 51 ரன்கள் (ஒரு சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து, பியுஸ் சாவ்லா சுழலில் சிக்கினார்.
சச்சின் அரைசதம்:
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரேயான் ஹாரிஸ் வீசிய ஆட்டத்தின் 17வது ஓவரின் முதல் பந்தில், ஒரு "சூப்பர் பவுண்டரி விளாசிய சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த பந்தில் "சிக்சர் அடிக்க முயன்ற சச்சின் (51), அபிஷேக் நாயரிடம் "கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின் இணைந்த போலார்டு, ரோகித் சர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. வல்தாட்டி, பியுஸ் சாவ்லா பந்தில் தலா ஒரு "சிக்சர் விளாசிய போலார்டு (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா (18), சைமண்ட்ஸ் (4*) ஓரளவு கைகொடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் ரேயான் ஹாரிஸ், பியுஸ் சாவ்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கில்கிறிஸ்ட் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்பஜன் சுழலில் கில்கிறிஸ்ட் எல்.பி.டபிள்யு., முறையில் "டக்-அவுட் ஆனார். பின் இணைந்த வல்தாட்டி, மார்ஷ் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது, சைமண்ட்ஸ் சுழலில் வல்தாட்டி (33) சிக்கினார்.
மார்ஷ் ஆறுதல்:
அடுத்து வந்த டேவிட் ஹசி (2), தினேஷ் கார்த்திக் (1) சொற்ப ரன்களில் வெளியேறினர். மறுமுனையில் அதிரடி காட்டிய மார்ஷ், ரன் வேட்டை நடத்தினார். ஹர்பஜன் பந்தில் ஒரு "பவுண்டரி அடித்த மார்ஷ், அரைசதம் அடித்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அபிஷேக் நாயர் (14) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த பிபுல் சர்மா (1), மலிங்கா வேகத்தில் "போல்டானார். பொறுப்புடன் ஆடிய மார்ஷ், 47 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
முனாப் படேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பியுஸ் சாவ்லா (10), பிரவீண் குமார் (2) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் ஹர்பஜன், மலிங்கா, முனாப் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். "ஆல்-ரவுண்டராக அசத்திய மும்பை அணியின் போலார்டு, ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
ஜேக்கப்ஸ் (ப)பிபுல் 10(10)
சச்சின் (கே)அபிஷேக் (ப)ஹாரிஸ் 51(45)
அம்பதி (கே)கார்த்திக் (ப)சாவ்லா 51(37)
போலார்டு (கே)வல்தாட்டி (ப)சாவ்லா 20(11)
ரோகித் (கே)ஹசி (ப)ஹாரிஸ் 18(11)
சைமண்ட்ஸ் -அவுட் இல்லை- 4(6)
சுமன் -அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 159
விக்கெட் வீழ்ச்சி: 1-14(ஜேக்கப்ஸ்), 2-109(அம்பதி), 3-129(சச்சின்), 4-144(போலார்டு), 5-158(ரோகித்).
பந்துவீச்சு: பட் 4-0-26-0, பிரவீண் 3-0-28-0, பிபுல் 4-0-22-1, ஹாரிஸ் 4-0-33-2, சாவ்லா 4-0-37-2, வல்தாட்டி 1-0-10-0.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வல்தாட்டி (கே)போலார்டு (ப)சைமண்ட்ஸ் 33(38)
கில்கிறிஸ்ட் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 0(2)
மார்ஷ் (கே)சச்சின் (ப)மலிங்கா 61(47)
ஹசி (கே)ரோகித் (ப)முனாப் 1(5)
கார்த்திக் எல்.பி.டபிள்யு.,(ப)போலார்டு 1(2)
அபிஷேக் (கே)சைமண்ட்ஸ் (ப)ஹர்பஜன் 14(9)
பிபுல் (ப)மலிங்கா 1(2)
சாவ்லா -அவுட் இல்லை- 10(10)
ஹாரிஸ் (கே)போலார்டு (ப)முனாப் 1(2)
பிரவீண் -அவுட் இல்லை- 2(3)
உதிரிகள் 12
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 136
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கில்கிறிஸ்ட்), 2-73(வல்தாட்டி), 3-79(ஹசி), 4-83(கார்த்திக்), 5-113(அபிஷேக்), 6-116(பிபுல்), 7-131(மார்ஷ்), 8-132(ஹாரிஸ்).
பந்துவீச்சு: ஹர்பஜன் 4-0-25-2, மலிங்கா 4-0-19-2, நேசிம் 3-0-22-0, முனாப் 4-0-18-2, சுமன் 1-0-12-0, போலார்டு 3-0-18-1, சைமண்ட்ஸ் 1-0-11-1.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts